குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது கார் டயர் வெடித்து மரத்தில் மோதியது; மாமியார், மருமகள் பலி...

Asianet News Tamil  
Published : Apr 17, 2017, 08:48 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது கார் டயர் வெடித்து மரத்தில் மோதியது; மாமியார், மருமகள் பலி...

சுருக்கம்

Apr with the family back to the temple car accident and the mother-in-law killed

விழுப்புரம்

சித்திரைத் திருநாளில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது எதிர்பாராத விதமாக கார் டயர் வெடித்து மரத்தில் மோதியது. இதில் மாமியார், மருமகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். உடன்வந்தவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள சில்லால் அல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி முருகம்மாள் (50). இவர்களது மகன்கள் அரிகிருஷ்ணன், முனுசாமி, மணிகண்டன் (25) ஆவர். அரிகிருஷ்ணனின் மனைவி ரேகா (22).

சித்திரை திருநாளில் திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்ய முருகம்மாள், அவரது மகன்கள் முனுசாமி, மணிகண்டன், மருமகள் ரேகா, முனுசாமியின் மகன் போத்திராஜ் (22), உறவினர்கள் மயில்முருகன் மகள் நவீனா (20), தேவேந்திரன் மகள் பூரணி (18), கிருஷ்ணமூர்த்தி மகள் நந்தினி (18) ஆகியோர் ஒரு வாடகை காரில் சென்றனர்.

காரை மோட்டாஸ் குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அசோக்குமார் (34) என்பவர் ஓட்டினார்.

கோவிலில் தரிசனம் செய்து முடித்த பின்னர், அங்கிருந்து அதே காரில் அனைவரும் ஊருக்குத் திரும்பினர். கார் சிதம்பரம் – சேலம் சாலையில் வந்து கொண்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே குரல் கிராமம் பிரிவு சாலையருகே கார் வந்தபோது, திடீரென காரின் முன்பக்க இடதுபுறம் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் ஓட்டுநர் அசோக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

காரின் இடிபாட்டிற்குள் சிக்கி முருகம்மாள், ரேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

முனுசாமி, மணிகண்டன், போத்திராஜ், நவீனா, பூர்ணி, நந்தினி, அசோக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து பற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பலியான முருகம்மாள், ரேகா ஆகியோரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்திரை திருநாளில் கோவிலுக்கு சென்று, திரும்பியபோது விபத்தில் சிக்கி மாமியார், மருமகள் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்