சிக்னல்களில் பேனர் வைக்க தடை..! ஹைகோர்ட்டின் அடுத்த அதிரடி..!

 
Published : Oct 30, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
சிக்னல்களில் பேனர் வைக்க தடை..! ஹைகோர்ட்டின் அடுத்த அதிரடி..!

சுருக்கம்

high court ban advertisement banners in traffic signals

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்த விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிப்பதால் விபத்துகள் நேர்கின்றன. எனவே போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும் என கோரி கோவை நுகர்வோர் மையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.

ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அனுமதி முடிந்தவுடன் அந்த பேனர்களை அகற்றிவிட வேண்டும் எனவும் அனுமதியை புதுப்பிக்கக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ வைக்கக்கூடாது எனவும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள் அமைக்கக்கூடாது எனவும் அண்மையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று போக்குவரத்து சிக்னல்களிலும் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது.

பேனர்களுக்கும் கட் அவுட்களுக்கும் எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவருவது அதனால் பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி