
கடலூர்
இனிமேல் யாரும் காதலிக்காதீர்கள் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு இரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். காதலி கோபத்தில் பேசாமல் சென்றதால் காதலன் விபரீதம்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மணிமாறன் (24). இவர் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த பூவனூர் அருகே, காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் விரைவு இரயில் முன் பாய்ந்தார் தங்கராஜ். இதில், தூக்கி வீசப்பட்ட தங்கராஜ் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் இரயில்வே காவலாளர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, தங்கராஜியின் உடலை பார்வையிட்டு விசாரணை தொடர்ந்தனர். அப்போது தங்கராஜியின் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவலாளர்கள் அதில், "தங்கராஜியும், அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தங்கராஜியுடன் வேறு மாணவிகள் பேசியதால், அவரது காதலி கோபமடைந்து பேசாமல் இருந்தார். இதனால் அவரது காதலிக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் அவர்களது காதல் பற்றி வீட்டில் சொல்லவும் முடியவில்லை. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும் முடியாததால் மன உளைச்சலில் இருந்த தங்கராக், "இனிமேல் யாரும் காதலிக்காதீர்கள்" என்றும் கடிதத்தில் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார்" என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தங்கராஜின் உடலை காவலாளர்கள் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.