
ஜெயலலிதா மகன் நான்தான் எனவும், அவரின் சொத்துக்களை எனக்கே மீட்டுத் தாருங்கள் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு வாலிபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி போர்ஜரி வழக்கில் உள்ளே போகனுமா என எச்சரிக்கை விடுத்தார்.
ஈரோடு மாவட்டம், காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது பெயர் கிருஷ்ணமூர்த்தி, நான் ஈரோட்டில் ஜெயலலிதாவின் தோழி வசந்தாமணி வீட்டில் வசித்து வருகிறேன்.
எனக்கும், எனது வளர்ப்பு தாயார் தந்தைக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன.
ஜெயலலிதாவிற்கு நான் ஒரே மகன் என்பதால் அவரின் சொத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தம்.
அம்மாவுடன் அறிமுகம் செய்யும் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன.
அப்பொழுது ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சசிகலாவிற்கு பயந்து என்னால் வெளியே வர முடியவில்லை.
அதனால் எனக்கும் எனது வளர்ப்பு தாயார் தந்தைக்கும் தகுந்த பாதுக்கப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமியுடன் கோர்ட்டில் ஆஜரானார்.
உன்னிடம் உள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் கையெழுத்திட்ட ஒரிஜினல் ஆவணங்கள், புகைப்படம், தத்து பத்திரம் என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்பு நாளை காலையில் ஆஜராக வேண்டும்.
மேலும் இந்த வழக்கை வரும் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தர விட்டார்.