
கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று ஒன்றாக சந்திப்பதால் நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்," தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்.29) நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்"என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: மறந்தும் பர்ஸில் இந்த பொருளை வைக்காதீங்க! காசு கையில் நிற்காமல், தரித்திரம் பிடிக்கும்!!
மே 1ஆம் தேதியில் மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Watermelon: வெயில் நேரத்தில் சூட்டை தணிக்க தர்பூசணி.. ஆனால் இந்த 3 உணவுகளோடு மட்டும் சாப்பிடாதீங்க!