TN Rain : இன்றும், நாளையும் தமிழகத்தில் கனமழை வெளுக்கப்போகுது.! மக்களே உஷார் !!

By Raghupati RFirst Published May 24, 2022, 2:44 PM IST
Highlights

Tamilnadu Rain : வெப்பச்சலனம் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வெப்பச்சலனம் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26ம் தேதி திருப்பத்தூர்,  வேலூர்,  ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும்  திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதேபோல் 27 மற்றும் 28ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுருளக்கோடு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 2 செண்டி மீட்டர் மழையும், பூதப்பாண்டி (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 1 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

24.05.2022, 25.05.2022 ஆகிய தேதிகளில், தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, தெற்கு கேரளா,  தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா  மற்றும் அதனை ஒட்டிய  தென்தமிழக கடலோர பகுதி,  குமரிக்கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !

இதையும் படிங்க : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்..? வெளியே கசிந்த தகவல்.! வேட்பாளர்கள் இவர்களா ?

click me!