மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர்..! பூவோடு சேர்த்து தட்டையும் தூக்கி வீசியதால் பரபரப்பு

Published : May 24, 2022, 01:39 PM ISTUpdated : May 24, 2022, 01:50 PM IST
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர்..! பூவோடு சேர்த்து தட்டையும் தூக்கி வீசியதால் பரபரப்பு

சுருக்கம்

மேட்டூர் அணையை பூ தூவி  முதலமைச்சர் அணையை திறந்து வைத்தநிலையில், பூவோடு சேர்த்து தட்டையும் முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கி வீசிய நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தியது.

முதல்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது.  இன்றைய 24.05.2022 நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும் நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே. காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-க்கு முன்பாகவே, 24.5.2022 முதல் நீரைத் திறந்துவிட  தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவிட்டார். மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு வழக்கமான தண்ணீர் திறக்கும் நாளான ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்னதாக முதல்முறையாக இன்று மே 24-ல் குறுவை பாசனத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடைமடை வரை தண்ணீர்

சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மிக முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். சுதந்திர இந்தியாவில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திறந்து விடப்படுவது இதுவே இரண்டாவது முறையாகும். மேட்டூர் அணையிலிருந்து மிக முன்னதாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரானது முழுமையாக டெல்டா பாசன பகுதியின் பகுதிகளுக்கும் சென்றடைய ஏதுவாகும். கடைமடை வரை அனைத்துப் மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா பாசனப்பகுதிகளில் வழக்கத்தைவிட குறுவை சாகுபடிக்காக சுமார் 5.22 லட்சம் ஏக்கர் பயிரிட்டு அறுவடை செய்ய எதிர்பார்க்கப்படும். எதிர்வரும் சம்பா சாகுபடி பணிகளை முன்னதாக தொடங்கி செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் நெல்மட்டுமல்லாமல் கோடை பயிரான பயறு மற்றும் தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது.

தட்டையும் தூக்கி வீசிய முதலமைச்சர்

தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று (24.5.2022) காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு, ஜூன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும். சம்பா மற்றும் தாளடி பாசனம் மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து 108.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டிஎம்சி தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று காலை திறந்து வைத்தார். அப்போது அணையில் இருந்து வெளியேறி தண்ணீர் மீது மலர் தூவினார். இதனை தொடர்ந்து நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனும் மலர் தூவினர். இதனையடுத்து முதலமைச்சரை பத்திரிக்கையாளர்கள் மீண்டும் பலர் தூவும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது முதலமைச்சர் மலரை தூவிவிட்டு தட்டையும் சேர்ந்து மேட்டூரில் இருந்து வெளியான நீரில் தூக்கி வீசினார். இந்த நிகழ்வு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்
5 தலைநகரங்கள்.. விவசாயிகளுக்கு அரசு ஊதியம்.. கல்வி, மருத்துவம் இலவசம்.. நாம் தமிழர் தேர்தல் அறிக்கை!