மிகக் கனமழை எச்சரிக்கை… நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…

By Selvanayagam PFirst Published Aug 16, 2018, 7:56 AM IST
Highlights

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் தொடர்நது கனமழை கொட்டி வரும் நிலையில் நீலகிரி மற்றும் கன்னியாகுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அப்பர்பவானி, அவலாஞ்சி, முக்குருத்தி, குந்தா, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி, பைக்காரா, கிளன்மார்கன், மரவகண்டி, மாயார், கெத்தை, காமராஜ் சாகர் ஆகிய 12 அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இதற்கிடையே தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

இதே போன்று குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது.

ஒரே நாளில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்டநிர்வாகம்  விடுமுறை அறிவித்துள்ளது.

click me!