ஓடும் இரயிலில் கோவை பெண்ணிடம் குசும்பு செய்த கேரள இளைஞர்; பதிலுக்கு அந்த வீரப்பெண் செய்ததை பாருங்கள்....

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 16, 2018, 7:20 AM IST
Highlights

ஓடும் இரயிலில் கோவை பெண்ணிடம் குசும்பு செய்த கேரள இளைஞர் குறித்து இரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் அந்த பெண். 

ஓடும் இரயிலில் கோவை பெண்ணிடம் குசும்பு செய்த கேரள இளைஞர் குறித்து இரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் அந்த பெண். இரண்டே ஸ்டாப்பிங்கில் அத்துமீறிய இளைஞரை இரயில்வே காவலாளர்களிடம் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைத்தார் அந்த வீரப்பெண்.

மத்தியப் பிரதேசம், இந்தூரில் இருந்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு 'அகில்யாநகரி' என்ற விரைவு இரயில் ஒன்று புறப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு சித்தூரை தாண்டி காட்பாடியை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. 

இந்த இரயிலில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்  ஒருவர் பொதுப்பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பக்கத்தில் இருந்த இளைஞர் ஒருவர், அப்பெண்ணிடம் அத்துமீறி உள்ளார். அப்பெண் கண்டித்தும் இந்த இளைஞர் தன் சேட்டைகளை தொடர்ந்தார்.

ஆனால் அந்த பெண் பயப்படாமல் இரயில்வே கட்டுப்பாட்டு அறையை 1512 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொண்டார். இதுகுறித்தும் புகார் கொடுத்தார். உடனே இரயில்வே அதிகாரிகள் இரயிலின் அடுத்த நிறுத்தமான காட்பாடியில் இருக்கும் இரயில்வே காவலாளர்களைத் தொடர்புக் கொண்டனர். ஆனால், இரயில் அதற்குள் காட்பாடியை கடந்துவிட்டது.

பின்னர், இரயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை இரயில்வே காவலாளர்களை தொடர்புக் கொண்டு தகவலளித்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு அந்த இரயில் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது. அங்கு தயாராக நின்ற இரயில்வே காவல் ஆய்வாளர் சிவகாமிராணி மற்றும் காவலாளார்கள் பொதுப்பெட்டிக்குச் சென்று பெண்ணிடம் அத்துமீறிய அந்த இளைஞரை இரயிலில் இருந்து கீழே இறக்கினர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய காவலாளர்கள், அவர் கேரளா மாநிலம், புல்லூரைச் சேர்ந்த சேதுபாய் மகன் நவாஸ் (32) என்பதை தெரிந்துக் கொண்டனர்.  பின்னர், அவரை இரயில்வே காவலாளர்கள் கைது செய்தனர். அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.

click me!