Trichy Rain : தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் கோடை மிகவும் கொடூரமாக இருந்த நிலையில் இந்த மழை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அதன் மத்தியில் அமைந்திருக்கும் மாவட்டம் தான் திருச்சி. மதுரையைப் போல திருச்சியும் துயிலா நகரம் என்று தான் அழைக்கப்படுகிறது. ஆனால் திருச்சியை பொறுத்தவரை அதை கந்தக பூமி என்றும் சிலர் அழைப்பது உண்டு. பெரிய அளவில் வெள்ளமோ கடும் மழையோ திருச்சியில் பொதுவாக இருக்காது.
அதேபோல கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத துவக்கத்தில், 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் கொளுத்தி எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் கடந்த ஒரு வார காலமாகவே மாலை முதல் இரவு வரை மூன்று முதல் ஐந்து மணி நேரம் தொடர் மழை பெய்து வருகிறது.
கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை; சாலையில் பெருக்கெடுத்த மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
திருச்சியின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுவதை காண முடிகின்றது. இது குறித்து தமிழ் நாடு வெதர்மேன் அளித்த தகவலின்படி, சேலம் மற்றும் திருச்சியில் தற்பொழுது அதிக கனத்த மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருச்சியை பொறுத்தவரை கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்த மே மாதம் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது என்று கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடுமலை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை முதல் அதிகளத்தமலை செய்யக்கூடும் என்றும் விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை; தமிழகத்தை பாலைவனமாக்கும் சூழ்ச்சியில் கேரளா - சீமான் காட்டம்