அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை கிடையாது..! தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்..!

First Published Nov 2, 2017, 12:42 PM IST
Highlights
heavy rain south tamilnadu and delta districts for next 2 days


அடுத்த 2 தினங்களில் தென் தமிழகம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. எனவே கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 13 செமீ மழை பெய்தது.

அடுத்த 2 தினங்களில் தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

தென் தமிழகம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓருசில இடங்களில் கனமழை பெய்யும். தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த 2 தினங்களைப் பொறுத்தவரையில் சென்னையில் கனமழை குறித்த அச்சம் தேவையில்லை. அதேநேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். 
 

click me!