உஷார் மக்களே..! தமிழகத்தில் இன்று மிக கனமழை..! வெளுந்து வாங்க போகும் மாவட்டங்கள் எவையெவை..!

Published : Apr 17, 2022, 02:39 PM IST
உஷார் மக்களே..! தமிழகத்தில் இன்று மிக கனமழை..! வெளுந்து வாங்க போகும் மாவட்டங்கள் எவையெவை..!

சுருக்கம்

தமிழகத்தில் இன்று சேலம்‌, நாமக்கல்‌, திருச்சி மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமுதல்‌ முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”  வட தமிழக கடலோர பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப
சலனம்‌ காரணமாக,

17.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம்‌, நாமக்கல்‌, திருச்சி மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமுதல்‌ முதல் மிக கன மழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, கரூர்‌, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர்‌, தேனி, தென்காச மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

18.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்தமிழகம்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.04.2022: தென்‌ தமிழகம்‌, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.04.2022: வட தமிழக கடலோர மாவட்டங்கள்‌, தென்‌ தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. .

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேோரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி
செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவும் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
மது-வால் லட்சக்கணக்கான பெண்கள் கண்ணீர் விட்டு கதறுறாங்க.. மகளிர் முன்னேறிவிட்டதாக ஸ்டாலின் கூறுவது வெட்கக்கேடு!