விழுப்புரத்தில் வெளுத்து வாங்கும் மழை; அங்கன்வாடிக்குள் மழைநீர் புகுந்ததால் உணவுப் பொருட்கள் சேதம்…

Asianet News Tamil  
Published : Jun 08, 2017, 06:30 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
விழுப்புரத்தில் வெளுத்து வாங்கும் மழை; அங்கன்வாடிக்குள் மழைநீர் புகுந்ததால் உணவுப் பொருட்கள் சேதம்…

சுருக்கம்

heavy rain in villupuram Due to rain water logging in the Anganwadi

விழுப்புரம்

விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வெளுத்து வாங்கியது. அங்கன்வாடி மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால், உணவு தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த்அ பொருட்கள் சேதமாயின. சராசரியாக விழுப்புரத்தில் 21.83 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் கொளுத்தியதால் மக்களை வாட்டி வதங்கினர். கத்திரி வெயில் காலம் முடிந்த பின்னும் வெயிலின் தாக்கம் குறையாமல் அடித்தது.

இருப்பினும் கடந்த ஒரு வாரமாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை வேளையில் அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் ஓரிரு நாளில் தொடங்க இருப்பதால் பல இடங்களில் இப்போதே பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து நிலத்தைக் குளிர்வித்தது.

விழுப்புரம் நகரிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்து இரவு 7 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கி இடைவிடாமல் சுமார் 15 நிமிடமாக தூறிக்கொண்டே இருந்தது.

பின்னர் இரவு 10 மணிக்கு மீண்டும் சாரல் மழை பெய்ய ஆரம்பித்து இடைவிடாமல் அரை மணி நேரமாக தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலையில் மழைநீர் வழிந்தோடியது.

தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்த சாரல் மழை நேற்று அதிகாலை வரை தூறிக்கொண்டே இருந்தது.

இதேபோல் நேற்று காலையும் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

மரக்காணம் பகுதியில் நேற்று இரவு முதல் நள்ளிரவு 1 மணி வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஓமிப்பேர் கிராமத்தில் ஆறு மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் ஓமிப்பேர் அங்கன்வாடி மையத்துக்குள் மழைநீர் புகுந்ததால், உணவு தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்து வீனானது.

நேற்று காலை அங்கன்வாடி மையத்துக்கு வந்த பணியாளர்கள், கட்டிடத்தில் தேங்கி நின்ற தண்ணீரை அகற்றினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்:

வானூர் – 60 மிமீ, மரக்காணம் – 55 மிமீ, செஞ்சி – 20 மிமீ, கள்ளக்குறிச்சி – 19 மிமீ, திண்டிவனம் – 18 மிமீ, விழுப்புரம் – 8 மிமீ, உளுந்தூர்பேட்டை – 8 மிமீ, திருக்கோவிலூர் – 7.50 மிமீ, சங்கராபுரம் – 1 மிமீ,

மொத்த மழை அளவு – 196.50 மி.மீ.

சராசரி – 21.83 மி.மீ.

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!