
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை, சாரல் மழை, தூரல் மழை என பெய்து நிலத்தையும், மக்களையும் குளிரிவித்து வருகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மேகம் சூழ்ந்த வானிலையே நிலவுகிறது. சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
திருவாரூரில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த மழையின் நிலவரப்படி குடவாசலில் அதிகபட்சமாக 14.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருவாரூரில் பெய்த மழையின் அளவு:
நீடாமங்கலம் 12.2 மில்லி மீட்டர், மன்னார்குடி 6 மில்லி மீட்டர், பாண்டவையார் தலைப்பு 4.6 மில்லி மீட்டர், நன்னிலம் 4.2 மில்லி மீட்டர், மற்றும் திருவாரூர் 2.4 மில்லி மீட்டர் என மொத்தம் 44.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.