கொட்டித் தீர்க்கும் கனமழை … நாகை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை …. 

 
Published : Nov 10, 2017, 09:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
கொட்டித் தீர்க்கும் கனமழை … நாகை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை …. 

சுருக்கம்

heavy rain in nagai and thiruvarur district ...school leave

வடகிழக்கு பருவமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு  நாளை  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையில் ஈரம் காய்வதறகுள் அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சியாக பரவியுள்ளது. இலங்கை - தமிழகம் இடையேயான மன்னார் வளைகுடாவில் வளி மண் டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருவாரூர் மற்றும் நாகை  மாவட்டங்களில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்த இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இரு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!