
குழந்தைகளின் கல்விக்காகவும், அரியலூரில் உள்ள 744 அங்கன்வாடிகளுக்கு ரூ. 38 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சத்தை நன்கொடையாக நடிகர் விஜய் சேதுபதி, தமிழக அரசிடம் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதி, அதில் ஒருபகுதியை குழந்தைகளின் கல்விக்காகவே அவர் வழங்குகிறார்.
இது குறித்து விஜய் சேதுபதி வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-
நான் அதிகமாக விளம்பரப்படங்களில் நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறேன். இப்போது அணில் புராடக்ட் விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரத்தில் நடித்துள்ளதில்கிடைத்ததொகையில் ஒருபகுதியை கல்வி உதவித்தொகை வழங்குகிறேன்.
கல்வியில் பின்தங்கி இருக்கும் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 744 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரம் வழங்க உள்ளேன்.
தமிழகத்தில் உள்ள 10 அரசு பார்வையற்ற பள்ளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட்சத்தையும், செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான 11 அரசு பள்ளிக்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரமும் வழங்க உள்ளேன்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் ஹெலன் கெல்லர் என்கிற செவித்திறன் குறைந்த பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.49 ஆயிரத்து 70 ஆயிரத்தை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்.
கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்த அதிக மதிப்பெண் பெற்று அது முடியாமல், உயிர் நீத்த மாணவி அனிதாவின் நினைவாக இந்த தொகையை வழங்குகிறேன்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.