அருப்புக்கோட்டையில் 45 நிமிடங்கள் வெளுத்து வாங்கிய கனமழை; பொதுமக்கள், விவசாயிகள் ஹாப்பி அண்ணாச்சி...

Published : Aug 06, 2018, 12:41 PM IST
அருப்புக்கோட்டையில் 45 நிமிடங்கள் வெளுத்து வாங்கிய கனமழை; பொதுமக்கள், விவசாயிகள் ஹாப்பி அண்ணாச்சி...

சுருக்கம்

விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டையில் 45 நிமிடங்கள் பெய்த கனமழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முதலில் கருமேகம் சூழந்து காரிருளாய் ஆன பிறகு மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், பூமி குளிர்ந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது. புறநகர் மற்றும் நகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. 

பகல் முழுவதும் வெயில் அடித்துவிட்டு மாலை வேளையில் சாரல் மழை பெய்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர். இதன்படி, சனிக்கிழமை மாலை தொடங்கிய மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. பின்னர், இரவு பெய்த மழை 7.30 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. 

வாகன ஓட்டிகள் இதனால் சிரமம் அடைந்தாலும் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியதால் மகிழ்ச்சி தெரிவித்தனர். அருப்புக்கோட்டையில் மட்டும் சுமார் 10 மில்லி மீட்டர் மழைப் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
ஆம்னி பேருந்து ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து தொங்கிய பேருந்து.. தூக்கித்தில் இருந்த 40 பயணிகளின் நிலை என்ன?