அலர்ட்!! நாளை 16 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதியில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்..

Published : Jun 05, 2022, 01:30 PM IST
அலர்ட்!! நாளை 16 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதியில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” குமரிக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌
வெப்பச்சலனம்‌ காரணமாக,

05.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

06.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணஒரி, தர்மபுரி, சேலம்‌, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, நாமக்கல்‌, கரூர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌,திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

08.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

09.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

05.06.2022: தமிழகத்தில்‌ ஒரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 -3 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்தகுற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ 

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Eesal Insect: ஈசல் ஆயுசு ஒரு நாள் மட்டும்தானா? இரவில் ஒளியைச் சுற்றி பறப்பதன் பின்னணி தெரியுமா?
Milk paneer: ஒரிஜினல் பன்னீர் vs போலி பன்னீர்.! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?