ராணிப்பேட்டையில் ரணகளம் செய்யும் கனமழை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Published : Nov 23, 2022, 08:35 AM ISTUpdated : Nov 23, 2022, 08:43 AM IST
ராணிப்பேட்டையில் ரணகளம் செய்யும் கனமழை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

சுருக்கம்

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் வடதமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் வடதமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக  சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்தது.

இதையும் படிங்க;- வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! சென்னையில் குளுமையான நிலை தொடரும் - வானிலை மையம்

குறிப்பாக நேற்று இரவு முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி இன்று ஒரு நாள் மட்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  பிரியாவை போன்று மற்றொரு சம்பவம்.. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8வது நாளில் இளம்பெண் உயிரிழப்பு.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
தமிழகத்தில் ஏப் 1 முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்..! 28 டோல்களுக்கான புதிய தொகை அறிவிப்பு..