உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… மீண்டும் தமிழகத்தில் கொட்டப்போகிறது அதிகனமழை!!

Published : Nov 22, 2021, 10:17 PM IST
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… மீண்டும் தமிழகத்தில் கொட்டப்போகிறது அதிகனமழை!!

சுருக்கம்

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதன் காரணமாக வரும் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதன் காரணமாக வரும் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை இழந்தனர். இதற்கிடையே வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா - வட தமிழக கடலோரப் பகுதிகளில் நெருங்கி வந்து சென்னை அருகே கரையை கடந்தது. இதை அடுத்து கர்நாடகாவின் உள்பகுதி அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது.

இதனால் நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிகிறது.

இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரே மாதத்தில் 3 வது முறையாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக வருகிற 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழைக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

சவுக்கு சங்கரை கைது செய்திருப்பது அப்பட்டமான துன்பறுத்தல்.. திமுகவுக்கு எதிராக குமுறும் கார்த்தி சிதம்பரம்
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!