இருள் சூழ்ந்தது சென்னையில்... கனமழைக்கு வாய்ப்பு.. பலத்த காற்று வீசுகிறது..!!!

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 03:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
இருள் சூழ்ந்தது சென்னையில்... கனமழைக்கு வாய்ப்பு.. பலத்த காற்று வீசுகிறது..!!!

சுருக்கம்

வடகிழக்கு பருவ மழை  தீவிரமடையும் வகையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை நகரில் முதன் முறையாக இன்று பரவலாக பல பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது. சென்னை முழுதும் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது.

தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விட்டது. அது மத்திய வங்கக்கடல் பகுதியில்  விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 570 கி.மீ தொலைவில் வங்ககடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும்  கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. நாகையில் 14 செ.மீ , காரைக்காலில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. 

சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு அவப்போது கனமழை பெய்யும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

காப்பி அடிக்கிறாங்க மிஸ்.. இன்னும் நல்லா கதறுங்க.. திமுகவை கலாய்த்து பதிலடி கொடுத்த அதிமுக!
பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?