தேர்தலுக்கும், தொற்று பரவலுக்கும் சம்பந்தம் இல்லை... வதந்தி பரப்ப வேண்டாம்... ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!!

Published : Jan 31, 2022, 03:45 PM IST
தேர்தலுக்கும், தொற்று பரவலுக்கும் சம்பந்தம் இல்லை... வதந்தி பரப்ப வேண்டாம்... ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!!

சுருக்கம்

தேர்தலுக்கும், கொரோனா தொற்று பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கும், கொரோனா தொற்று பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறைந்து வருக்கிறது. அதன் காரணமாக தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. புதிதாக 24,418 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,885 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 33,03,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 4,508 ஆகக் குறைந்திருக்கிறது. கோவை மாவட்டத்தில் 3,309 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,198 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 1,649 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 1,264 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து தேர்தல் வருவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை அரசு குறைத்துக் காண்பிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கும், கொரோனா தொற்று பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா இறங்குமுகத்தில் தொடர பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய் தொற்றானது டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருந்தது.

தற்போது குறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. நோய்த்தொற்றை பொறுத்தவரை 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைக்‍கு வருகின்றனர். 95 சதவீதம் பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தேர்தலுக்கும், நோய்த்தொற்று பரவலுக்கும் சம்பந்தம் இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தால் தான் நோய் தொற்று அதிகரிக்கும். எனவே சமூக வலைதளத்தில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். சரியான செய்திகளை பகிருங்கள். தமிழகத்தில் டெல்டா இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. அடுத்த 2 வாரத்தில் கொரோனா பரவல் மேலும் குறையலாம். பொது இடங்களில் தளர்வுகள் அளித்த பின்னர் பொதுமக்கள் கூட்டமாக செல்லாதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!