Health secretary Letter: மக்களே உஷார்.. இதையெல்லாம் கவனியுங்கள்.. அலர்ட் கொடுக்கும் சுகாதாரத்துறை..

By Thanalakshmi VFirst Published Dec 20, 2021, 7:13 PM IST
Highlights

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும் எனவும், ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் போன்றவற்றின் தினசரி கையிருப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தங்களது விவரங்களை பதிவு செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சிங்கப்பூர், ஹாங்காங், பிரிட்டன், இஸ்ரேல் போன்ற 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. இதனால் ஒமைக்ரான் பரவல் அதிகமாக உள்ள 12 நாடுகள் ரெட் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளன. அதிக ஆபத்து நாடுகளாக வகைப்படுத்தப்பட்டு, இந்நாட்டிலிருந்து வரும் பயணிகள் மிக மிக தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.  இருந்தபோதிலும் நேற்று முன்தினம் வரை தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 113 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். மேலும் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர், கர்நாடகாவில் 6 பேர், கேரளாவில் 4 பேர் என நேற்றும் 30 பேர் புதிதாக ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 143 ஆக உயர்ந்து விட்டது. 

இதற்கிடையே, நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தில் காத்திருந்து அதன் பின்னரே வீடுகளுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றாலும் கட்டாயம் ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அடுத்த 8ஆவது நாள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர். மேலும் ஒமைக்ரான் பாதிப்பா என ஆய்வகம் ஆய்வு செய்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் போன்றவற்றின் தினசரி கையிருப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!