பணியிடம் ஒதுக்கப்படாததால் ஒற்றை ஆளாய் சுகாதார அதிகாரி உண்ணாவிரதம்; பல்வேறு அமைப்புகள் ஆதரவு...

 
Published : Nov 16, 2017, 08:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
பணியிடம் ஒதுக்கப்படாததால் ஒற்றை ஆளாய் சுகாதார அதிகாரி உண்ணாவிரதம்; பல்வேறு அமைப்புகள் ஆதரவு...

சுருக்கம்

health officer is in hunger strike because the work is not assigned

கோயம்புத்தூர்

பணியிடம் ஒதுக்காததால் மன உளைச்சல் அடைந்த கோவை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒற்றை ஆளாய் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சுகாதார அதிகாரியாக பணியாற்றி வருபவர் பிச்சைமணி (52). இவர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நேற்றுக் காலை 9 மணியளவில் ஒற்றை ஆளாக அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த உண்ணாவிரதம் குறித்து சுகாதார அதிகாரி பிச்சைமணி கூறுவது:

"நான் 1986–ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சியில் சுகாதார உதவியாளராக பணியில் சேர்ந்து சுகாதார ஆய்வாளராகி தற்போது சுகாதார அதிகாரியாக பணியாற்றி வருகிறேன்.

சுகாதார உதவியாளராக பணியில் சேர்ந்து ஓய்வு பெறும்போது சுகாதார ஆய்வாளராகதான் பணி ஓய்வு பெறுகிறோம். வேறு பதவி உயர்வு கிடையாது.

எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2015–ஆம் ஆண்டு மனு கொடுத்தோம். அதன்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பணி மூப்பு அடிப்படையில் சுகாதார அதிகாரியாக பதவி உயர்வு பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களிலும் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், எனக்கு சுகாதார அதிகாரி பதவி உயர்வு கொடுத்தப் பிறகும் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. நான் இன்னும் சுகாதார ஆய்வாளர் பணியைதான் செய்து வருகிறேன். எனக்கு கீழ் பணிபுரிபவர்கள் சுகாதார அதிகாரியாக வேலை செய்கிறார்கள்.

இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரதம் தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் பிச்சைமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற மறுத்து விட்டார்.

இதனையடுத்து காவலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பட்டு நேற்று மாலை தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார் பிச்சைமணி.

பிச்சைமணியின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!