அரியலூரில் 13 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது...

First Published Nov 16, 2017, 7:55 AM IST
Highlights
duplicate doctor arrested in ariyalur


அரியலூர்

அரியலூரில் 13 ஆண்டுகளாக மருந்தகம் நடத்திக்கொண்டு உடல்நிலை சரியில்லாமல் வருபவர்களுக்கு ஊசி போட்டு, மருந்து தந்து வைத்தியம் பார்த்துவந்த போலி மருத்துவர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர் பிஎஸ்சி., கணினி அறிவியல் படித்துள்ளார். இவர், அந்தப் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வந்தார்.

மேலும், இவரது மருந்தகத்துக்கு உடல் நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு அவ்வப்போது ஊசி போட்டு, மருந்து மாத்திரை கொடுத்து வந்துள்ளார்.

இதில், சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜன் விசாரணை மேற்கொண்டார்.

அந்த விசாரணையில் ராஜ்குமார் போலி மருத்துவர் என்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் மீது கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகின்றது.

click me!