ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதுபோல ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்த பெண் கைது...

 
Published : Nov 16, 2017, 07:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதுபோல ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்த பெண் கைது...

சுருக்கம்

Arrested by a woman of Rs 30 thousand as the money was paid in ATM ...

விருதுநகர்

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.30 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள தீயனூரைச் சேர்ந்தவர் இலட்சுமி (45). இவர் காரியாபட்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது அருகில் நின்ற ஒரு பெண், தான் பணம் எடுத்துத் தருவதாக இலட்சுமியிடம் கூறியுள்ளார். லட்சுமியும் அவரை நம்பி தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணும் ரூ.3 ஆயிரம் எடுத்துக் கொடுத்துள்ளார்.

பின்னர் இலட்சுமி வீட்டிற்குச் சென்று செல்போனை பார்த்தபோது ரூ.13 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த லட்சுமி, அந்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதை உணர்ந்து உடனே காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல காரியாபட்டி அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணிடமும் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து ஒரு பெண் ரூ.20 ஆயிரம் திருடி உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரிலும் காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி இரண்டு பெண்களிடமும் மோசடியில் ஈடுபட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த சீதாலட்சுமியை (37) காவலாளர்கள் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!