95.2 லட்சம் பேர் உரிய நேரத்தில் 2வது டோஸ் செலுத்திக்கொள்ளவில்லை... சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!

By Narendran SFirst Published Jan 24, 2022, 4:58 PM IST
Highlights

தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் வேளையில் மூன்றாவது டோஸ் என்ற பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது டோஸ் செலுத்த உரிய நேரம் வந்தும் 95.2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 79.3 லட்சம் பேரும் கோவாக்சின் செலுத்திக் கொண்ட 15.8 லட்சம் பேரும் தங்கள் இரண்டாவது தவணையை உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 21 ஆம் தேதி ஒரு கோடியே 26,647 பேர் இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை. கடந்த மூன்று நாட்களில் தவணை தவறிய 5,00,000 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் தற்போது இந்த எண்ணிக்கை 95,00,000 குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 5,78,91,000 பேர் உள்ளனர். இதில் 89% அதாவது 5,15,21,353 பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். இரண்டாவது டோஸ் செலுத்தியவர்கள் 3,76,31,891 பேர் ஆவர். அதாவது 65% பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். தவணை தவறிய 95,00,000 பேரும் தடுப்பூசி செலுத்தியிருந்தால் தமிழ்நாட்டில் 80% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியிருந்திருப்பார்கள்.

தமிழகத்தில் இது வரை சுகாதாரத்துரையினர் 97% பேர் முதல் டோஸ் மற்றும் 64% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர். முன்களப் பணியாளர்கள் 82% பேர் முதல் டோஸ் , 45% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 63% பேர் முதல் டோஸ் மற்றும் 49% பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் இரண்டு லட்சத்து 17,963 பேர் செலுத்தியுள்ளனர். இது வரை 9.29% சுகாதாரத்துறையினர், 4.57% முன்களப் பணியாளர்கள், 4.18% முதியவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்களை மாவட்ட வாரியாக கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

click me!