
தருமபுரி அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தருமபுரியை அடுத்துள்ள ஆட்டுக்காரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் என்பவர், குடிபோதையில் பள்ளிக்கு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல், குடிபோதையில் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போதையில் வந்த தலைமை ஆசிரியர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
தகவல் அறிந்த மாவட்ட கல்வி துறை அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சமாதானம் செய்தனர். தலைமையாசிரியர் தங்களை மோசமாக திட்டியதன் காரணமாகவே, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததாக மாணவர்கள் கூறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Attachments area