
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைகிறது என்பது பதிலளிக்க மத்திய-மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, தங்களுடைய மாவட்டங்களில் அமைக்கக்கோரி தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைய உள்ளது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே. ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைகிறது என்பது குறித்து, மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.