
டாஸ்மாக் அமைக்கும் விவாகரத்தில் சட்டத்தை மட்டும் பார்க்காமல் மக்களை நலனையும் கருத்தில் கொள்ளுங்கள் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது
தமிழகத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து கொண்டே போகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கிராம சபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் டாஸ்மாக் அமைக்க கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கிராம சபை தீர்மானங்கள் நிறைவேற்றிய இடங்களில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே படூர் இந்துஸ்தான் கல்லூரி அருகே டாஸ்மாக் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் விதிகளுக்குட்பட்டே மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைகேட்ட நீதிபதி ராமச்சந்திரன் பாபு மக்கள் நலனை கெடுக்கும் டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்டுவதை ஏற்கமுடியுமா என கேள்வி எழுப்பினார்.
மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று ஸ்டிக்கர் ஒட்டினால் போதாது எனவும், மக்கள் நலனுக்காக டாஸ்மாக் கடைகளை திறப்பதாக எந்த அரசும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் கல்லூரி அருகே இருக்கும் மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.