பான் மசாலா குட்கா போலீசார் முறைகேட்டுக்கு சிபிஐ விசாரணை கிடையாது!! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

First Published Jan 27, 2017, 10:53 PM IST
Highlights


பான்மசாலா, குட்கா விற்பனையில் போலீசார் லஞ்சம் வாங்கி அனுமதிக்கும் விவாகரத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுப்படி செய்து உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா ஆகியவை விற்பனை செய்யவதற்கு போலீசார் லஞ்சம் பெற்று விற்பனைக்கு  அனுமதிப்பதாகவும். இந்த சம்பவத்தில் பல போலீஸ் மூத்த அதிகாரிகளே லஞ்சம் வாங்குவதாகவும் .

எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் வின்சென்ட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல். எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா ஆகியவை விற்பனை செய்வதற்கு போலீசாரே மாமூல் வாங்கி கொண்டு அனுமதிப்பதாகவும், இதில் பல உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் ,

எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும் என சென்னை மாநகர கமிஷனர், மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். 

எனவே இதில் நேர்மையான விசாரணை நடக்க  , சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அப்போது தலைமை நீதிபதி, போலீஸ் கமிஷனர், உள்துறை செயலாருக்கு அனுப்பிய ரகசிய கடிதம் வெளியானது எப்படி என கேள்வி எழுப்பினார். 

மேலும் போலீஸ் கமிஷனரே இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வரும் பட்சத்தில், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது ,  மேலும் மனுதாரர் இந்த வழக்கை தொடுக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுப்படி செய்வதாக உத்தரவிட்டார்.

click me!