அலங்காநல்லூர் , பாலமேட்டில்  ஜல்லிக்கட்டு  திடீர்  ஒத்திவைப்பு  -  ஒபிஎஸ்  தொடங்கிவைக்க  ஏற்பாடு ..!!!

 
Published : Jan 27, 2017, 08:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
அலங்காநல்லூர் , பாலமேட்டில்  ஜல்லிக்கட்டு  திடீர்  ஒத்திவைப்பு  -  ஒபிஎஸ்  தொடங்கிவைக்க  ஏற்பாடு ..!!!

சுருக்கம்

மதுரை  அலங்காநல்லூரில் பிப்.1 ஆம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  ஜல்லிக்கட்டு  விழா குழுவினர்  தெரிவித்துள்ளனர்.மதுரை  அலங்காநல்லூரில் பிப்ரவரி  1 ஆம்  தேதியும்,  பாலமேட்டில் பிப்.2 ஆம்  தேதியும்  நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு  திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திடீர் முடிவு :

அலங்காநல்லூர்  மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினர்  ஒன்றாக  சென்று, இன்று மதுரை  மாவட்ட  ஆட்சியரை சந்தித்து  பேசினர்.ஆட்சியர்  சந்திப்புக்கு  பின்  செய்தியாளர்களை  சந்தித்த  விழாக்குழுவினர்,  தற்போது  அலங்காநல்லூர்  மற்றும்  பாலமேட்டில்  பிப்ரவரி  1  ஆம் தேதி   நடைபெற இருந்த  ஜல்லிக்கட்டு  தேதி  மாற்றி  அமைக்க  உள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு பின்னர் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் விழாக்குழுவினர்  தெரிவித்தனர்.

முதல்வர்  ஒபிஎஸ்  துவங்கி வைக்க  ஏற்பாடு :

 ஜல்லிக்கட்டுக்கு  அவசர சட்டம் இயற்றிய பின்னர் ,  முதல்வர்  பன்னீர்  செல்வம்  துவங்கி   வைப்பதாக  இருந்த  ஜல்லிக்கட்டு,  மாணவர்களின்  தொடர் போராட்டம்  காரணமாக  நடைபெறாமல்  போனது.   இந்நிலையில்  ஜல்லிக்கட்டு  தேதி  மாற்றி அமைத்து,   மீண்டும்  முதல்வர் ஓ. பன்னீர்  செல்வம்  அவர்களே  , ஜல்லிக்கட்டை  துவங்கிவைக்க  உள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது.  அதற்கான  ஏற்பாடுகளும்  மும்முரமாக  நடந்து வருகிறது  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?