மகன் இறந்த சோகம்... அவனது பிறந்தநாளின்போதே குடும்பத்துடன் தற்கொலை செய்த கொடுமை!

Published : Oct 20, 2018, 12:43 PM ISTUpdated : Oct 20, 2018, 12:45 PM IST
மகன் இறந்த சோகம்... அவனது பிறந்தநாளின்போதே குடும்பத்துடன் தற்கொலை செய்த கொடுமை!

சுருக்கம்

இறந்த மகனின் பிறந்த நாள் அன்று, தாய் - தந்தை - இரண்டாவது மகன் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த மகனின் பிறந்த நாள் அன்று, தாய் - தந்தை - இரண்டாவது மகன் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மணாங்குப்பத்தை சேர்தவர் திருவேங்கடம். இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இவர்களது மூத்த மகன் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். 

மூத்த மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் தாய் - தந்தை இருவரும் மீளா துயரில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், மூத்த மகனின் பிறந்த தினத்தை நேற்று அவர்கள் கொண்டாடினர். திருவேங்கடம், தனது குடும்பத்தினருடன் முதியோர் இல்லத்திற்கு சென்று, அங்கு அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் வீட்டுக்கு வந்த திருவேங்கடம், மகனின் பிரிவை எண்ணி மனம் வெதும்பியுள்ளார். இதேபோல் அவரது மனைவியும் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இனியும் நாம் வாழ்வதில் அர்த்தமில்லை என்று எண்ணிய அவர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர். திருவேங்கடம், அவரது மனைவி பரிமளா, இளைய மகன் மாதேஷ் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூத்த மகனின் உயிரிழப்பால் மனமுடைந்து தந்தை - தாய் - இரண்டாவது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!