ஷாக்!! ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.. டிக்கெட் முன்பதிவு குறித்து வெளியான தகவல்..

By Thanalakshmi V  |  First Published Aug 31, 2022, 8:50 AM IST

ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து ரத்து செய்தால் சேவை கட்டணத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி அல்லது முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் நிதித்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் படிக்க:மக்களே அலர்ட்!! இனி முக கவசம் அணியாவிட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு வெளியானது..

Tap to resize

Latest Videos

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பயணிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் ஒப்பந்த நிறுவனங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ரத்து செய்தால், ஒப்பந்த நிறுவனங்களுக்கான சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஏசி அல்லது முதல் வகுப்பில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்து, ரத்து செய்தால் இனி சேவை கட்டணத்துடன் சேர்த்து சரக்கு மற்று சேவை வரி 5 % வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:கவனத்திற்கு!! முதுநிலை பட்டத்தாரி ஆசிரியர் நியமனம்.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தெரியுமா..?

அதுமட்டுமின்றி, இனி விமான பயணம், தங்கும் விடுதிகள் போன்றவற்றிலும் முன்பதிவை ரத்து செய்தால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!