
பல தடைகளை மீறி அமலுக்கு வருகிறது ஜிஎஸ்டி..... வரி ஜுலை 1 முதல் அமல்...
ஜிஎஸ்டி அமல்
மறைமுக வரியை நாடு முழுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக , அறிமுகப்படுத்தப்பட்ட ஜி எஸ் டி வரி விதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த ஜிஎஸ் டி வரி விதிப்பு முறைக்கு தற்போது தான் விடிவுக் காலம் பிறந்துள்ளது.
எப்போது அமல் ?
பலக்கட்ட போரட்டத்திற்கு பின், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி ஜுலை 1 முதல் அமல்படுத்தப்படும் என தற்போது மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
சக்தி காந்த தாஸ்
இது குறித்து, பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ், ஜுலை 1 முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி முதல் அமல்படுத்தப்படும் என்றும், இதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஜிஎஸ்டி மசோதாவிற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் கூறினார்
ஒரே விலை
ஜிஎஸ்டி அமலுக்கு வந்துவிட்டால் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும், எல்லா பொருட்களும் ஒரே விலைக்கு விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.