வாகனங்களில் "ஜிபிஎஸ்" கருவி கட்டாயம்...! ஏப்ரில் 1 முதல் அமல்..!

 
Published : Jan 18, 2018, 08:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
வாகனங்களில் "ஜிபிஎஸ்" கருவி கட்டாயம்...! ஏப்ரில் 1 முதல் அமல்..!

சுருக்கம்

gps is must for all the passengers travels and bus

வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம்...! ஏப்ரில் 1 முதல் அமல்..!

அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொறுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.அதன்படி,இருப்பிடம் காட்டுகிற கருவியான ‘ஜி.பி.எஸ்.’ என்ற  கருவி,நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் கட்டாயம்  பொறுத்த வேண்டும் என  தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது கூடுதல் தகவல்.

இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

அனைத்து வாகனமுமா அல்லது புதிய வாகனத்தில் மட்டுமா ?

அதாவது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களிலும் ஜிபிஎஸ் பொருத்த வேண்டுமா அல்லது புதிய வாகனத்தில் பொறுத்த வேண்டுமா? அல்லது அனைத்து வாகனத்திலும் கட்டாயம் பொறுத்த வேண்டுமா என்பது குறித்த முழு விளக்கம் இல்லை

பயணிகள் வாகனம் என்றால்,ஆட்டோவிலும் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!