திருமண சான்றிதழ் வழங்க லஞ்சம் - கையும் களவுமாக பிடிபட்ட ஊழியர்

 
Published : Oct 06, 2016, 06:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
திருமண சான்றிதழ் வழங்க லஞ்சம் - கையும் களவுமாக பிடிபட்ட ஊழியர்

சுருக்கம்

திருமண சான்றிதழ் வழங்க ரூ. 1000 லஞ்சம் கேட்ட சப்ரிஜிஸ்ட்ரார் அலுவலக ஊழியர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பிடிபட்டார்.
பட்டாபிராம் ,சேக்காடு டெய்லர்ஸ் காலனியை சேர்ந்தவர் தினேஷ்குமார். சாஃப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார்.

இவருக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. தனது திருமணத்தை தினேஷ்குமார் ஆவடி சப்ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பதிவு செய்தார்.
பதிவு திருமணம் முடிந்து 15 நாளில் வர வேண்டிய சான்றிதழ் தினேஷ் குமார் கைக்கு வரவில்லை.

பல முறை அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறை ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் வருவதற்கும் தினேஷ்குமார் லீவு போடு நிலை ஏற்பட்டது.

இது பற்றி ஆவடி ரிஜிஸ்ட்ரார் அலுவலக ஊழியர் தனபாலிடம்(54) தினேஷ்குமார்  முறையிட்டார்,
ஒவ்வொரு முறை லீவு போட்டு அதனால் பண விரயத்தை விட எதாவது கவனித்தால் உடனே முடித்து தருகிறேன் என்று தனபால் கூறியுள்ளார். 5 மாத காலமாக சாதாரண சான்றிதழுக்கு அலைந்த  தினேஷுக்கு இதை கேட்டவுடன் கோபம் வந்துள்ளது. 

அதை அடக்கி கொண்டு எவ்வளவு வேண்டும் என கேட்டுள்ளார். ரூ.1300 கொடுங்கள் என்று கூறியுள்ளார். அவ்வளவு முடியாது 1000 ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு ஒத்துகொள்வது போல் ஒத்துகொண்ட தினேஷ் இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரை பெற்ற . லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ஜான் கிளமண்ட், எஸ்ஐ மனோகரன் தலைமையிலான தனிப்படையை அமைத்தார். தனிப்படையினர் ரசாயனம் தடவிய நோட்டை தினேஷிடம் கொடுத்து தனபாலிடம் கொடுக்க சொன்னார்கள். 

பணத்தை தினேஷ்குமாரிடமிருந்து தனபால் வாங்கினார் அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை  மடக்கிப் பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!