அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமா? அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!!

By Narendran S  |  First Published Nov 26, 2022, 7:49 PM IST

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார். 


அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம்.

இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஏற்பாடு... நவ.28 முதல் டிச.31 வரை சிறப்பு முகாம்!!

Tap to resize

Latest Videos

கிட்டத்தட்ட 37 ஆயிரத்து 588 பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் இருக்ககூடிய தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 6 பேரில் ஒருவர் பள்ளி மாணவர்களாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே திமுக அலுவகம் முன்பு 85 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை!!

தாமிரபரணியின் பழங்காலத்து பெயர் பொருநை என்று செல்கிறார்கள். இலக்கியவாதிகள் கற்பனை திறன் கொண்டவர்கள். திருநெல்வேலி வட்டாரம் என்று வரும் போது, இங்கு இருக்கின்ற எதார்த்தத்தை மீறாமல், அதனை உள்ளடக்கி இலக்கியத்தை தரக்கூடியவர்கள் என்று தெரிவித்துள்ளார். 

click me!