மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி… அரசு பேருந்துகள் இயங்காது… விமான சேவையிலும் மாற்றம்!!

By Narendran SFirst Published Dec 8, 2022, 11:07 PM IST
Highlights

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக்கலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறியுள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காரைக்காலில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ளது. இந்தப் புயல் தற்போதைய நிலவரப்படி மணிக்கு 6 கி.மீட்டரிலிருந்து 12 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கக் கூடும்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எச்சரிக்கை... 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைவு... தலைமை செயலாளர் இறையன்பு தகவல்!!

மேலும் இந்த புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் விடுமுறை அறுவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசுப் பேருந்து இயங்காது என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எச்சரிக்கை… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்ததெந்த மாவட்டங்கள்?

அதேபோல், பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புயல் காரணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடி, சீரடி, மங்களூர் செல்லும் ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையிலிருந்து சிங்கப்பூர், இலங்கை, மும்பை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 11 விமானங்கள் தாமதமாகப் புறப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

click me!