அரசு பேருந்து ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை... 21 முதல் 6 நாட்கள் தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு

First Published Oct 14, 2016, 1:02 AM IST
Highlights


இந்த மாதம் தீபாவளி 30 ஆம் தேதி வருவதை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்றுள்ளவர்கள் விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை, இந்த மாதம் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 27, 28 ஆகிய நாட்களில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்கள், பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் முன்பதிவு முடிந்துவிட்டன. அதேபோல், 29, 30, 31 ஆகிய நாட்களில் தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களக்கு இயக்கப்படும் பேருந்துகளின் முன்பதிவும் முடிந்து விட்டன. 

தீபாவளி பண்டிகையையொட்டி, 26 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வெளி மாநிலங்களில் இருந்து 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறும் என்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், கண்காணிப்பாளர்கள், கிளை உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள் ஆகியோருக்கு விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுப்பில் சென்றுள்ளவர்கள் வரும் 24 ஆம் தேதிக்குள் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!