மூன்று பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய குழு! அதிரடியாக அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

By SG Balan  |  First Published Sep 6, 2023, 11:54 PM IST

சென்னை பல்கலைக்கழகம், உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, யுஜிசி (UGC) எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியும் துணைவேந்தர் நியமனம் செய்யும் குழுவில் இருக்கவேண்டும் என ஆளுயர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். அதற்கு தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

ஆனால், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி, முதல் முறையாக பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவரும் இந்தத் துணைவேந்தர் தேடுதல் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தரை நியமிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதுதான் வழக்கம். ஆனால், இப்போது நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் உதயநிதியுடன் நிற்போம்! இந்தியா என்ற பெயரே சரி! இறங்கி அடிக்கும் இயக்குநர் வெற்றிமாறன்!

சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்யப்பட, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைப் புறக்கணித்து பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதியையும் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது சரச்சைக்கு வித்திட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். "தேடுதல் குழுவை கவர்னர் ரவி தன்னிச்சையாக நியமித்து உள்ளார். தேடுதல்குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.

"ஆளுநர் நியமித்து உள்ள தேடுதல் குழு குறித்த அறிவிப்பு பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் விதிகளுக்கு எதிரானது. அரசின் அலுவல் விதிப்படி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஏப்ரல் 2022 ஏப்ரலில் அனுப்பி வைக்கப்பட்ட துணைவேந்தர் நியமன மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்துக்கு உட்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயார்! ராஜீவ் குமார் அறிவிப்பு

click me!