கவர்னர் மாளிகையில் போலீஸ் குவிப்பு - சென்னையில் பரபரப்பு

 
Published : Feb 11, 2017, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
கவர்னர் மாளிகையில் போலீஸ் குவிப்பு - சென்னையில் பரபரப்பு

சுருக்கம்

எம்எல்ஏக்களுடன் சசிகலா கவர்னர் மாளிகைக்கு அனுமதியின்றி நுழையலாம் என்பதால்  திடீரென கவர்னர் மாளிகையை சுற்றி நூற்றுகணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக தலைமையை யார் கைப்பற்றுவது? ஆட்சியை யார் பிடிப்பது? என்ற போட்டியில் நிமிடத்துக்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது.

வெளியூர்களில் இருந்து கட்சிகாரர்கள் போர்வையில் வன்முறையை தூண்டி விடுவதற்காக அடியாட்கள் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கில் சென்னை முழுவதும் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள் எந்த நேரத்திலும் கலவரத்தில் ஈடுபடலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் தன்னை அழைக்காமல் கவர்னர் காலமா கடத்துவதையடுத்து சசிகலா கவர்னருக்கு கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில் கவர்னரை நேரில் சந்திக்க மாலை 7.30 மணிக்கு ஆனால் இதுவரை கவர்னர் தரப்பிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுடன் கவர்னர் மாளிகைக்கு வரலாம் என்ற தகவலையடுத்து கவர்னர் மாளிகையை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கவர்னர் மாளிகை வாயிலில் தடுப்பு வெளி அமைத்து போலீசார் வாகனங்களை சோதனைக்கு பின்னரே அனுமதிகின்றனர்.

கவர்னர் மாளிகை அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சாலை பரபரப்புடன் காணப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!