
வேலூர் மாவட்டத்தில் கொளஞ்சியப்பர் டிரான்ஸ்போர்ட்டுக்குச் சொந்தமான சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
வேலூர் தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது, எதிரில் இருந்த பள்ளத்தில் அந்த லாரி சிக்கிக் கொண்டது.
பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், பள்ளம் கண்ணுக்கே தெரியவில்லை. அதனை, காணாத ஓட்டுநர் பள்ளத்தில் லாரியை விட்டார்.
இதில், அந்த லாரியில் ஒருபக்கம் அப்படியே பூமியில் புதைந்தது. ஓட்டுநர் எவ்வளவோ முயற்சித்தும் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்க முடியவில்லை.
லாரி மாட்டிக் கொண்ட சாலை குறுகியது என்பதால், மற்ற வாகனங்கள் கடந்து செல்ல போதுமான வழி இல்லை. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.
தாலுகா அலுவலகத்தின் எதிரில் இவ்வளவு பெரிய பள்ளம் இருக்கிறது. அதனை சரிசெய்யாமல் மாநகராட்சியும், அதனைக் கண்டு கொள்ளாமல் தாலுகா அலுவலக நிர்வாகிகளும் இருப்பது வேதனைக்கு உரியது என்று மக்கள் கருத்து தெரிவித்தனர்.