
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் நடந்த அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி புதிய ஊதிய குழு அமைத்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், தங்களது 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர்கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தியது. அதில், வரும் ஜூலை மாதத்துககுள், ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் விலக்கி கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.