அரசு அலுவலகம், வழக்குரைஞர்கள் சங்கம் முதல்வருக்கு அஞ்சலி…

 
Published : Dec 08, 2016, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
அரசு அலுவலகம், வழக்குரைஞர்கள் சங்கம் முதல்வருக்கு அஞ்சலி…

சுருக்கம்

தர்மபுரி,

தர்மபுரியில் அரசு அலுவலகங்னள் மற்றும் வழக்குரைஞர்கள் சங்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருடைய மறைவு தமிழக மக்களை சோகத்தில் மூழ்கடித்தது.

இதனையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் உள்ள அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் விவேகானந்தன் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பாப்பாத்தி, சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பஷீர் அகமது, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் இலாஹிஜான், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, அரசு கேபிள் டி.வி. தாசில்தார் லதா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தர்மபுரி வழக்குரைஞர்கள்ச ங்கம் சார்பில் தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அங்கு, அவரது உருவப்படத்திற்கு சங்க தலைவர் அப்புனு கௌண்டர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி