
தஞ்சாவூர் அருகே அரசு பஸ் மீது மினி வேன் மோதியதில் 6 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியானார்கள். 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பஸ் நேற்று மாலை புறப்பட்டது. ஆலங்குடி - வல்லம் பிரிவு அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் மினி லாரி வேகமாக வந்தது.
திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு வாகனங்களின் டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். பஸ் மற்றும் வேன் இடிபாடுகளில் சிச்கிய பயணிகள் 6 பெண்கள், ஒரு ஆண் உடல் நசுங்கிஇறந்தது தெரிந்தது. 20க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து சடலங்களை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பினர். மேலும் மேலும் காயமடைந்த 19 போ் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் 5 போ் மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.