பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடங்க இருப்பதாக தமிழக போக்குவரத்துறை துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
வந்தாரை வாழவைக்கும் சென்னை, பிழைப்புத் தேடி வருவோரை, மொழி, மதம் என எந்த வேறுபாடுமின்றி அரவணைக்கிறது சென்னை. சொந்த ஊரில் வேலை இல்லாமல் சென்னை வருபவர்களுக்கு வழி கொடுத்து வாழவைக்கிறது. அப்படி சென்னைக்கு வருபவர்கள் முக்கிய விஷேச நாட்களில் தங்களது குடும்பங்களை சந்திக்கவும், அவர்களோடு ஒன்றாக பண்டிகையை கொண்டாடவும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்போது ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பதால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடம் கிடைக்காத நிலை உருவாகும். இதன் காரணமாக பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
undefined
சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்து
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி மாதம் 14,15,16 ஆகிய தினங்களில் தொடர் விடுமுறை வருகிறது. மேலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையும் கிடைப்பதால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல விரும்புவார்கள். இவர்களுக்கான ஏற்கனவே ரயில் முன்பதிவு தொடங்கிய நிலையில் ஒரு சில மணி நேரத்தில் அனைத்து ரயில்களிலும் இடங்கள் காலியானது. இதனையடுத்து தற்போது அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கு பயணம் செய்ய முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
முன்பதிவு இன்று தொடக்கம்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்; tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
UPSC Exam: குடிமையியல் பணி தேர்வர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி..!