செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

By SG Balan  |  First Published Apr 15, 2023, 8:47 AM IST

செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் ஏப்ரல் 23ஆம் தேதி வரை மதுரையில் இருந்து தினமும் 5.40 மணிக்குப் புறப்படுகிறது. நான்காவது நாள் விராவல் சென்றடையும்.


சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு - சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி கொடியைத்து துவக்கி வைத்தார்.

Tap to resize

Latest Videos

புதிய உச்சம்! 50,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 20 பேர் மரணம்

இந்த சிறப்பு ரயிலானது, மதுரையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரயில் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7.30 மணிக்கு விராவல் ரயில் நிலையம் சென்று சேரும். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் காலை 9 மணிக்கு விராவல் ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.

இந்தச் சிறப்பு ரயிலில் 3 டயர் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் 2, பொதுப்பெட்டிகள் 4 இந்தப் பெட்டியில் உள்ளன. இத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பெட்டியும் பார்சல்களுக்கான ஒரு பெட்டியும்  இருக்கிறது. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுன்டா, கச்சிகுடா, நான்டெட், பூமா, அகோலா, ஜலகாவோன், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்... சூப்பர் அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் மஸ்தான்!!

இந்த நிகழ்ச்சியில் குஜராத் மற்றும் தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்கள், கைத்தறிகள், உணவு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் கண்காட்சி காட்சிப்படுத்தப்படும். தமிழ், சௌராஷ்டிரா மற்றும் குஜராத்தி இலக்கியங்களில் கிடைக்கக்கூடிய ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய விவாதங்கள் மற்றும் கருத்தரங்குகள், அத்துடன் பாரம்பரிய நடனம் மற்றும் இசை, நாட்டுப்புற இசை, கச்சேரிகள் மற்றும் விவாதங்கள் நடைபெறும்.

நிகழ்வுகள், வருகைகள், கலந்துரையாடல் மூலம் அறிவுசார் பரிமாற்றத்தின் மூலம், இரு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் தங்களைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!