
சென்னை அல்லது மதுரையில் கூகுள் நிறுவனத்தின் கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். 1998ல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு 2004 ஆம் ஆண்டு வெளியிடபட்ட்டது.
இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு மவுண்டன் வியூ, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றியது. மேலும் ஒரு நாளில் பில்லியனுக்கும் மேலான தேடல்களை கூகுள் நிறுவனம் கையாள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மென்பொருள் பொறியியல், இணைய முன்னேற்றங்கள், தொழில்நுட்ப பிரச்னைகளைக் கையாள்வது, போன்ற பல்வேறு வேலைவாய்ப்புகளை கூகுள் வழங்கி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக உறுப்பினர் பெரியசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மதுரை அல்லது சென்னையில் கூகுள் நிறுவன கிளை அமைக்க சுந்தர்பிச்சையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தமிழகம் வந்திருந்த சுந்தர்பிச்சையை அதிகாரிகள் சந்திக்கவில்லை என்று ஐ.பெரியசாமி கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் சுந்தர்பிச்சை தனிப்பட்ட விவகாரத்திற்காக தமிழகம் வந்ததால் அவரை சந்திக்கவில்லை என்று கூறினார்.