சிந்தாதரிபேட்டையில் கடத்தப்பட்டவர் கொலை செய்யப்பட்டார் – மீஞ்சூர் அருகே உடல் மீட்பு...

 
Published : Jun 23, 2017, 05:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
சிந்தாதரிபேட்டையில் கடத்தப்பட்டவர் கொலை செய்யப்பட்டார் – மீஞ்சூர் அருகே உடல் மீட்பு...

சுருக்கம்

The chindatripet kidnapped person was murdered accused arrested

சிந்தாதரிபேட்டையில் சொத்துக்காக, மனைவியின் தாய்மாமனை கடத்தி கொலை செய்ததாக அவரது நண்பர் யூசுப் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, ரிச் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கதிரவன், கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும், யூசுப் என்பவர் கதிரவனின் அக்கா மகளை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், கதிரவன் வசிக்கும் வீட்டில், தனக்கும் உரிமை உள்ளது எனக்கூறி, யூசுப் பல மாதங்களாக சண்டையிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து நேற்று மாலை, கதிரவன் தன் வீட்டிற்கு அருகே நடந்து சென்ற போது, காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கதிரவனை கடத்தி சென்றது.

கதிரவன் மனைவி அமுதா அளித்த புகாரின் பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் சென்னை அடுத்து உள்ள மதுரவாயிலில் கார் டிரைவர் பிடிபட்டார்.

பின்னர், மேலும் யூசுப்பின் கூட்டாளிகள் சரண்ராஜ், வர்கீஸ், தேவா, திருநாவுக்கரசு, சக்திவேல் ஆகிய 5 பேரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  

இந்நிலையில் இந்த வழக்கில் கதிரவனின் நண்பர் யூசுப் போலீசாரால் கைது செய்யபட்டார். பிடிபட்ட யூசுப்பிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கடத்தப்பட்ட கதிரவனை கொலை செய்து மீஞ்சூர் அருகே தூக்கி வீசிவிட்டு சென்றாதாக வாக்கு மூலம் அளித்தார். இதையடுத்து கதிரவனின் உடல் மீஞ்சூர் அருகே மீட்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Pongal Gift: பொங்கல் பரிசு 5,000 ரூபாய்?.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்.. இல்லத்தரசிகள் குஷி!
சொன்னதை செய்து காட்டிய ஸ்டாலின்.! திமுக தொண்டர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!